Latestமலேசியா

கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி அழைப்பு கசிவு; பதவி நீக்கப்பட்ட தாய்லாந்து பிரதமர் பெட்டோங்டார்ன்

பேங்கோக் – ஆகஸ்ட்-30 – கம்போடியத் தலைவருடனான தொலைப்பேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் தாய்லாந்து பெண் பிரதமர் பெட்டோங்டார்ன் ஷினாவாட் (Paetongtarn Shinawatra) பதவியிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு மாத கால விசாரணைக்குப் பிறகு அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. தாய்லாந்து – கம்போடிய எல்லை நெருக்கடி குறித்து ஜூன் மாத வாக்கில் கம்போடியாவின் சக்தி வாய்ந்த முன்னாள் பிரதமர் Hun Sen-னுடன் பெட்டோங்டார்ன் தொலைப்பேசியில் உரையாடினார்.

Hun Sen-னும் பெட்டோங்டார்ன் குடும்பமும் நல்ல நட்பில் இருந்ததால், அவரை மரியாதையாக uncle என்று அழைத்த பெட்டோங்டார்ன், தாய்லாந்து இராணுவத்தை விமர்சனம் செய்தும் பேசியிருந்தார்.

அதோடு உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் எனக் கூறினார். ஆனால் இந்த உரையாடல் பதிவை Hun Sen-னே வெளியில் கசிய விட்டு விட்டார்; இதனால் நாட்டையே பிரதமர் விற்று விட்டார் எனக் கூறி தாய்லாந்தில் போராட்டங்கள் வெடித்தன.

பெட்டோங்டார்ன் பதவி விலக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. எல்லைப் பிரச்னையில் உயிர்கள் பலியாகக் கூடாது என்ற நல்ல நோக்கில் தான் தனிப்பட்ட முறையில் உரையாடியதாக 39 வயது பெட்டோங்டார்ன் விளக்கமளித்தார்.

விஷயம் பெரிதாகி, அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை இடைநீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், நெறிமுறைத் தவறியதாகக் கூறி, 9 பேர் கொண்ட நீதிபதிகள் 6-3 என்ற அடிப்படையில் பெட்டோங்டார்னை நேற்று பதவி நீக்கம் செய்தனர்.

முன்னாள் பிரதமர்களான இவரின் தந்தை Thaksin Shinawat 2006 இராணுவப் புரட்சியிலும், அத்தை Yingluck Shinawat 2014-ஆம் ஆண்டு இதே அரசமைப்பு நீதிமன்றத்தாலும் பதவி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!