
தோக்யோ, ஆக 21 – ஜப்பானின் அகிதா ( Akita ) மாநிலத்தில் 93 வயது முதியவரின் மரணம் தொடர்பான விசாரணை, தொடக்கத்தில் கரடி தாக்கியதாக வகைப்படுத்தப்பட்டது.
பிரேத பரிசோதனையில் கத்திக்குத்து காயங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அது கொலையாக மாற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜப்பானிய போலீசார் செவ்வாய்க்கிழமை டெய்சன் (Daisen) நகரில் கொலையுண்டதாக கூறப்பட்ட நபரின் 51 வயது மகனை கைது செய்தனர்.
வேலையில்லாத அந்த சந்தேக நபர் புஜியுகி ஷிண்டோ ( Fujiyuki Shindo ) என்று அடையாளம் காணப்பட்டதோடு அவர் தனது தந்தையை கொலை செய்ததாக திங்கட்கிழமையன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்த நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டரா என்ற தகவலை போலீசார் இன்னும் வெளியிடவிலை