
செப்பாங், பிப் 19 – காஜாங் சில்க் (Kajang Silk) நெடுஞ்சாலையின் 28.2 ஆவது கிலோமீட்டரில் அவசர தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதனை ஓட்டிச் சென்ற தாதி ஒருவர் மரணம் அடைந்தார்.
செர்டாங் (Serdang) , சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா (Sultan Abdul Aziz Shah) மருத்துவமனையில் தாதியாக பணியாற்றிவரும் 29 வயதுடைய நுருல் இல்ஹாம் நோர்டின் ( Nurul Ilham Nordin ) செராஸிலிருந்து (Cheras) சைபர் ஜெயாவிற்கு (Cyberjaya ) தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது 3 டன் லோரியில் மோதி கீழே விழுந்ததைத் தொடர்ந்து அவர் மீது Perodua Bezza மற்றும் Perodua Aiza கார்கள் மோதியதாக செப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையத்தின் துணைத் தலைவர் Superintendan ஷான் கோபால் (Shan Gopal ) தெரிவித்தார்.
நேற்று மதியம் 1.30 மணியளவில் நடந்த இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு அந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் Sepang போலீஸ் தலைவமையகத்தின் போக்குவரத்து விசாரணை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி இன்ஸ்பெக்டர் Mohamad Fadzil Zainol Abidinனை தொடர்பு கொள்ளும்படி ஷான் கோபால் கேட்டுக்கொண்டார்.