கோலாலம்பூர், டிச 23 – பத்தாங் காலிக்கு அருகே Gohtong Jaya போலீஸ் நிலையத்திற்கு அருகே இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் காரில் சிக்கிக்கொண்டதில் மரணம் அடைந்த வேளையில் மற்றொருவர் காயம் அடைந்தார்.
காலை மணி 10.05 அளவில் இவ்விபத்து குறித்து கோலாகுபு பாரு தீயணைப்புத்துறைக்கு தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் Toyota Corolla Altis காரும் CAM Placer-X வேனும் சம்பந்தப்பட்டன.
விபத்து நிகழ்ந்த இடத்திலேயே கார் ஓட்டுநரான 58 வயதுடைய ஆடவர் இறந்த வேளையில் வேன் ஓட்டுநரான 33 வயதுடைய நபர் தலையில் காயம் அடைந்தார். காரின் இடுபாடுகளில் சிக்கிக் கொண்ட கார் ஓட்டுநரை தீயணைப்பு வீரர்கள் சிறப்பு சாதனத்தை பயன்படுத்தி மீட்டனர்.
எனினும் அவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததை சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் பணியாளர் உறுதிப்படுத்தினார். காயம் அடைந்த வேன் ஓட்டுநர் சிகிச்சைக்காக செலயாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.