Latestமலேசியா

காஸாவை எடுத்துக்கொளும் டிரம்பின் ஆலோசனையை எதிர்த்து அமெரிக்கா தூதரகத்திற்கு வெளியே எதிர்ப்பு

கோலாலம்பூர், பிப் 14 – காஸாவை ஆக்கிரமித்து பாலஸ்தீன மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50 பேர் இன்று இங்குள்ள அமெரிக்க தூதரகம் முன்பு அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு Menara Tabung Haji யில் கூடிய பல இன மக்கள், பாலஸ்தீனக் கொடிகளை ஏந்திக்கொண்டும் மற்றும் காசா விற்பனைக்கு இல்லை என்ற வாசக அட்டைகளை ஏந்தியவாறு ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தூதரகத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர்.

Seri Serdang சட்டமன்ற உறுப்பினர் அபாஸ் ஆஸ்மி, ( Abbas Azmi ) , Pejuang தகவல் பிரிவுத் தலைவர் ரபிக் ரஷிட் அலி ( Rafique Rashid Ali ) மற்றும் ஆலோசகர் தியான் சுவா (Tian Chua) ஆகியோரும் இந்த எதிர்பு பேரணியில் கலந்து கொண்டனர்.

சிவில் சமூகக் குழுவான  Sekretariat Solidariti Palestin மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் மலேசிய ஆலோசனைக் குழு இந்த எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்தது.

காசாவை அமெரிக்கா கைப்பற்றி, அதன் குடியிருப்பாளர்களை நகர்த்த வேண்டும், மேலும் அந்த பகுதியை “மத்திய கிழக்கின் ரிவியரா (Riviera ) பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று கடந்த வாரம் டிரம்ப் தெரிவித்த தனது முன்மொழிவின் மூலம் மத்திய கிழக்கு முழுவதும் கோபத்தைத் தூண்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!