Latestமலேசியா

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்க பணியாளர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை – அமைச்சு விளக்கம்

புத்ராஜெயா, டிசம்பர்-27 – KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சு அண்மையில் நடத்திய கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்க, அதன் பணியாளர்கள் எவரும் கட்டாயப்படுத்தப்படவில்லை.

மாறாக அவரவர் விருப்பத்தின் பேரிலேயே பங்கேற்றதாக அமைச்சு உறுதிப்படுத்தியது.

கொண்டாட்டத்தின் போது பாடல்களைப் பாடியவர்கள் கூட, சபா – சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் ஆவர்.

அவர்கள் பாடியப் பாடல்களும் Merry Christmas போன்ற பெருநாள் வாழ்த்துப் பாடல்களே;

முஸ்லீம்கள் யாரும் அந்த இசைப் படைப்பில் பங்கேற்கவில்லையென, KPKT-யின் நெருங்கிய வட்டாரம் FMT-யிடம் கூறியது.

புத்ராஜெயாவில் உள்ள KPKT கட்டடத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வின் புகைப்படங்கள் முன்னதாக வைரலான நிலையில், பாஸ் கட்சியின் தலைவர் ஒருவர் அந்நிகழ்வை சாடியிருந்தார்.

இஸ்லாத்துக்கு எதிராக மற்ற மதக் கொண்டாட்டங்களில் முஸ்லீம்கள் பங்கேற்கக் கூடாதென்பது அமைச்சுக்கும் அமைச்சர் Nga Kor Ming-கிற்கும் தெரியாதா என, பாஸ் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் Hanif Jamaluddin கேட்டிருந்தார்.

அது குறித்து பேசிய போது KPKT இவ்விளக்கத்தை அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!