
பாச்சோக், செப்டம்பர்-26,
கிளந்தான், பாச்சோக்கில் 7 வயது சிறுவன் ஒருவன், தனது சொந்த மாமாவின் கையால் சுத்தியலால் தாக்கப்பட்டதில், படுகாயமடைந்து உயிருக்குப் போராடுகிறான்.
இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று மாலை சந்தேக நபரின் கடை வீட்டில் நிகழ்ந்தது.
இரத்தக் காயங்களுடன் சிறுவன் உடனடியாக மலாயா அறிவியல் பல்கலைக்கழக நிபுணர் மருத்துவமனைக்கு (HPUSM) கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலைப்பகுதியில் தாக்கப்பட்டதால் அவனது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட போலீஸ் கூறியது.
சந்தேக நபரின் நிலை உட்பட
மேல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.