
பாச்சோக், டிசம்பர் 24-கிளந்தான், பாச்சோக்கில் Kemayang கடலில் குளித்து விளையாடிய 9 வயது சிறுவன், நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று மாலை 6.45 மணியளவில் Muhamad Irfan Mod Afendi பெரிய அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவனது பெற்றோர் அங்கிருந்ததாகவும், மகனைப் பிடித்து இழுக்க முயன்றும் தந்தை தோல்விகண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு-மீட்புப் படையினர் முதலில் நீர்மட்டத்தில் சிறுவனைத் தேடினர்.
எனினும் இரவு வரையில் அம்முயற்சி பலனளிக்கவில்லை.
இன்று காலை தேடுதல் நடவடிக்கை மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



