
சுபாங், அக்டோபர்-21 – குறைந்தபட்ச அடிப்படைச் சம்பள உயர்வு, பொது போக்குவரத்துச் சேவைக் கட்டணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
எனவே சேவைக் கட்டண உயர்வு குறித்து கவலை வேண்டாமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் உத்தரவாதமளித்துள்ளார்.
பொது போக்குவரத்து கட்டணங்களை அரசாங்கமே ஒழுங்குமுறைப்படுத்தி வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.
பேருந்து ஓட்டுநர்கள் உட்பட பொது போக்குவரத்துத் தொழிலாளர்களில் பெரும்பாலோர், ஏற்கனவே 1,700 ரிங்கிட்டுக்கும் கூடுதலாகவே சம்பளம் பெற்று வருவதாக அமைச்சர் சொன்னார்.
நடப்பிலுள்ள குறைந்தபட்ச சம்பள விகிதமான 1,500 ரிங்கிட், அடுத்தாண்டு பிப்ரவரி முதல் 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவதாக, 2025 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது பிரதமர் அறிவித்திருந்தார்.