Latestமலேசியா

குறைந்தபட்சம் 3,000 ரிங்கிட் சம்பளத்தை வழங்க தனியார் நிறுவனங்கள் முன் வர வேண்டும்; பிரதமர் பரிந்துரை

கோலாலம்பூர், செப்டம்பர் -4, தனியார் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக 3,000 ரிங்கிட்டை நிர்ணயிக்க முன்வர வேண்டும்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது ஊழியர்களுக்கு 3,000 ரிங்கிட்டை குறைந்தபட்ச சம்பளமாக வழங்கி வரும் Khazanah Nasional-னை மற் தனியார் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென அவர் சொன்னார்.

அவ்விஷயத்தில் Khazanah-வை உண்மையிலேயே பாராட்டத் தான்  வேண்டுமென்றார் அவர்.

தனியார் நிறுவனங்களின் மனிதநேய மதிப்பு, CSR எனப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்பைத் தாண்டியது.

நிறுவனம் மட்டுமே வளர்ந்து,  மனிதநேயம் சரிந்தால் அதனால் பயனேதுமில்லை.

வருமானமும் முக்கியம் தொழிலாளர் நலனும் முக்கியம் என, Khazanah Nasional-லின் 30-ஆம் நிறைவாண்டு கொண்டாட்டத்தில் உரையாற்றிய போது அதன் தலைவருமான பிரதமர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!