Latestமலேசியா

குளுவாங்கில் அம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்து ஓட்டுநர் பலியான சம்பவம்; டயர் வெடிப்பே காரணம் என போலீஸ் தகவல்

 

குளுவாங், டிசம்பர்-10 – ஜோகூர் குளுவாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் செகாமாட் மருத்துவமனைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்த சம்பவத்துக்கு, அதன் பின்புற இடது டயர் வெடித்ததே காரணமாகும்.

குளுவாங் போலீஸ் அதனை உறுதிப்படுத்தியது.

நேற்று மதியம் செகாமாட்டிலிருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் திடீரென டயர் வெடித்தால் அம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடப்புறமாகக் கவிழ்ந்தது.

அதில், அம்புலன்ஸ் ஓட்டுநரான 43 வயது Nurazrein Zainal, தலை மற்றும் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

25 வயது Dahlia Atan, 35 வயது Siti Rokiah Hassan ஆகிய 2 தாதிகள் தலையிலும் கைகளிலும், நோயாளியான 45 வயது அமுதா வேலுசாமி தலையிலும் காயமடைந்தனர்.

மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகின்றனர்.

மேல் விசாரணை நடைபெறுவதாக போலீஸ் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!