Latestமலேசியா

குவாந்தானில் சாலையின் எதிர்த் திசையில் வாகனம் ஓட்டிய மூதாட்டி

குவாந்தான், அக்டோபர் 3 – குவாந்தானியிலுள்ள சாலைகள் குறித்த அறிமுகமில்லாத மூதாட்டி ஒருவர், சாலையின் போக்குவரத்திற்கு எதிராக வாகனம் ஓட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

76 வயதான அந்த மூதாட்டி, தனது பெரோடுவா ஆக்சியா வாகனத்தை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, போலீசார் விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அதில், மூதாட்டியைக் கண்டுபிடித்து விசாரணையை மேற்கொண்டதில், அவர் தனியாக குவாந்தானிலிருந்து Penor-யிலுள்ள முதியோர் இல்லத்திற்கு பயணம் செய்தது தெரியவந்தது.

வயது மூப்பு காரணமாகவும், சாலை வழிகள் பற்றி அதிகம் தெரியாத காரணத்தால், தான் அறியாமலேயே போக்குவரத்து சாலைக்கு எதிராக வாகனம் ஓட்டிச் சென்றதாகக் கூறியுள்ளார், அந்த மூதாட்டி.

வாகனத்தை ஓட்டுபவர்கள் தகுந்தவர்களாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும், அவர்களுக்கும், பிற சாலைப் பயனர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என்றும் குவாந்தான் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் வான் ஜஹாரி அறிவுறுத்தினார்.

இந்நிலையில், சாலை போக்குவரத்துச் சட்டம் 1987-யின் கீழ், போக்குவரத்து அறிகுறிகளுக்கு இணங்கத் தவறியதற்காக மூதாட்டிக்குச் சம்மன் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!