Latestமலேசியா

கெடா பாலிங்கில் கோழிகளை வேட்டையாட முயன்ற 5 மீட்டர் நீள மலைப்பாம்பு பிடிப்பட்டது

பாலிங், ஆகஸ்ட் 22 – இன்று அதிகாலை, கெடா பாலிங் கம்போங் பாங்கோலில் (Kampung Banggol), கோழிக் கூண்டிலிருந்து எழுந்த பெரும் சத்தம் காரணமாக பதட்டமடைந்த விவசாயி ஒருவர், தனது கால்நடைகளை வேட்டையாட வந்த சுமார் ஐந்து மீட்டர் நீள மலைப்பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அச்சமடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் அளித்த நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் என்று பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சுல்கைரி மாட் தன்ஜில் (Zulkhairi Mat Tanjil) கூறியுள்ளார்.

சுமார் 40 கிலோ எடையுடைய அந்த மலைப்பாம்பு கோழிக் கூண்டிலிருந்து தப்பித்து சென்றபோதும் சுமார் 35 நிமிடங்களுக்குள் தீயணைப்பு துறையினர் வெற்றிகரமாக அப்பாம்பை பிடித்து பின்னர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் (PERHILITAN) ஒப்படைத்தனர்.

ஆகஸ்ட் 15 முதல் இதுவரை இப்பகுதியில் 14 பாம்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவற்றில் பெரும்பாலானவை ராஜ நாகப்பாம்புகளும் மலைப்பாம்புகளும் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய காலநிலை மாற்றங்கள், வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உணவு, தங்குமிடம் தேடும் முயற்சிகள் ஆகிய காரணங்களால் பாம்புகள் மனித குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன என்று அறியப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!