கெமாமான், அக்டோபர்-9 – திரங்கானு கெர்த்தே அருகே இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்தில், superbike எனப்படும் உயர் செயல் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளோட்டி கொல்லப்பட்டார்.
Mohd Rafee Mohd Saari என அடையாளம் கூறப்பட்ட 54 வயது அவ்வாடவரின் உடல், மூன்று பகுதிகளாக துண்டாகியது.
சிலாங்கூர், கோம்பாக்கிலிருந்து குவாலா திரங்கானுவுக்கு வேலைக்குச் செல்லும் வழியில் அவரின் BMW RT superbike கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதியது.
மோதிய வேகத்தில் அவர் நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் Hanyan Ramlan தெரிவித்தார்.
அவரின் உடல் சவப்பரிசோதனைக்காக கெமாமான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.