கோத்தா பாரு, நவம்பர்-19, கிளந்தான், கோத்தா பாருவில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் உணவகமொன்று, முறைப்படி சான்றிதழ் பெறாமல் ஹலால் முத்திரையைப் பார்வைக்கு வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2021-ல் ஹலால் சான்றிதழுக்கு அவ்வுணவகம் விண்ணப்பித்துள்ளது; ஆனால் அது அங்கீகரிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று மதியம் வாக்கில் கிளந்தான் இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் ஒத்துழைப்புடன், உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அங்கு சோதனை நடத்தியது.
அதன் போது, 2011 வர்த்தக முத்திரைச் சட்டத்தை மீறும் வகையில், அனுமதிப் பெறாத ஹலால் சான்றிதழை அது பார்வைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஹலால் முத்திரை பதித்த 2 பதாகைகள் உட்பட 150 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முஸ்லீம் வாடிக்கையாளர்களைக் குழப்பும் நோக்கில் ஹலால் முத்திரைகளைப் பயன்படுத்தினால் அதிகபட்சமாக 1 மில்லியன் ரிங்கிட் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என KPDN நேற்று மக்களவையில் கூறியிருந்தது.