
கோப்பெங், டிச 1 – கோப்பேங் 3 1/2 மைலில் அமைந்துள்ள இந்திய கிராமத்திற்கு அமரர் சி. ஜெகநாதன் பெயர் சூட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் அதே வேளையில் அந்த கிராமத்திலுள்ள 16 இந்திய குடும்பத்திற்கு வீட்டுமனை நில உத்தரவாத கடிதத்தை பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வழங்கியுள்ளார்.
இக்கிராமம் இதுவரை முறையான பெயரை கொண்டிருக்கவில்லை. இதனை முன்னிட்டு இக்கிராமத்தை உருவாக்க சேவையாற்றியுள்ள அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு மறைந்த சகோதரர் ஜெகநாதன் சிம்மாதிரி பெயரை சூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக கம்பார் மாவட்ட நில இலாகா இகாகுநருடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என சிவநேசன் குறிப்பிட்டார்.
மேலும் இந்த கிராமத்தில் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலய திருப்பணி தொடங்கப்பட்டுள்ளதால் அதன் திருப்பணிக்கு பேராக் மாநில அரசாங்கம் அடுத்தாண்டு நிதியுதவி வழங்கி உதவி செய்யும் என்றும் சிவநேசன் கூறினார்.
பேராக் மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் பல ஆண்டுகளாக குடியேறிய மக்களுக்கு கட்டம் கட்டமாக நிலப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் இங்குள்ள மக்களுக்கு நில உத்திரவாத கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் நிலத்தில் அல்லது தோட்ட துண்டாடல் வாயிலாக நிலம், வீட்டுமனை கிடைக்கப்பெற்றவர்கள் வழக்கறிஞர்கள் உதவியை நாடி அந்த நிலங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
இதனிடையே முதல் கட்டமாக இன்று 16 குடும்பத்துற்கு நில உத்திரவாத கடிதம் வழங்கப்பட்டதால் மற்றவர்களுக்கும் நில உத்திரவாத கடிதங்கள் வழங்கப்படும் என்று இக்கிராமத்தை உருவாக்கியவரும், இக்கிராமத்து தலைவரும், கோத்தா பாரு ம இ கா கிளைத்தலைவருமான சி.சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.



