
கோலாலம்பூர், மே 29 – அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ‘மான்செஸ்டர் யுனைடெட்’ – ‘ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ்’ காற்பந்து போட்டியில் கலந்துக் கொண்ட, ‘மான்செஸ்டர் யுனைடெட்’ (Manchester United) அணியின் காற்பந்து வீரர்களான ‘அமத் டியாலோ’ (Amad Diallo), ‘அலெஜான்ட்ரோ கார்னாச்சோ’ (Alejandro Garnacho) மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரம் ‘அய்டன் ஹெவன்’ (Ayden Heaven) ஆகியோர் கோலாலும்பூரில் அதிகாலை நேரத்தில் உல்லாசமாக சுற்றி வருவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் தங்களின் தங்கும் விடுதிகளுக்கு அருகிலுள்ள தெருக்களில் மிகுந்த மகிழ்வுடன் சுற்றித் திரிந்து, உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மின்-மோட்டார்வண்டிகளை வாடகைக்கு எடுக்க முயன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அக்காலை பொழுதில் தங்களைச் சுற்றி வளைத்த இரசிகர்களுடன் அவர்கள் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
உலக பிரபலங்களான அம்மூவரும் எவ்வித தடைகளுமின்றி மக்களோடு மக்களாக இணைந்து குதுகூலமாக இருந்த காணொளியொன்று வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.