
மும்பை, ஜூலை 17 – போயிங் 787 விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் உள்ள பூட்டு அம்சத்தை ஏர் இந்தியா ஆய்வு செய்ததில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இந்திய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானம் ஓடும் நிலையில் இருந்து ‘கட்ஆஃப்’ நிலைக்கு திரும்பியதால் போயிங் மாடல்களின் சுவிட்சுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் விபத்துக்குள்ளான போயிங் 787 விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்படும்போது விபத்துக்குளாகி அதிலிருந்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.