Latestமலேசியா

சபா கரையோரத்தில் முக்குளிப்புப் பயிற்சியில் விபத்து; VAT 69 அதிகாரி மரணம்

செம்போர்னா, ஜனவரி-23-சபா, செம்போர்னா கடலில் முக்குளிப்புப் பயிற்சியின் போது VAT 69 கமாண்டோ இன்ஸ்பெக்டர் Khairil Azhar Kamaruddin உயிரிழந்ததை, தேசியப் போலீஸ் படைத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று காலை Pulau Mataking கரையோரத்தில் பயிற்சியின் போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அவசர சிகிச்சைக்குப் பின் செம்போர்னா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர், அங்கு உயிரிழந்தார்.

இதையடுத்து பயிற்சி நடைமுறைகள், கருவிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெறுகிறது.

VAT 69 என்பது உயர் ஆபத்து நிறைந்த நடவடிக்கைகளுக்குப் பெயர்பெற்ற நாட்டின் சிறப்பு போலீஸ் படையாகும்.

மறைந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு PDRM ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!