Latestமலேசியா

சபாவில் RM635,000 மதிப்புள்ள மின்சிகரெட் & வேப் பறிமுதல் – PGA துறையினரின் அதிரடி நடவடிக்கை

கோத்தா கினாபாலு, ஜனவரி 17 – கடந்த வியாழக்கிழமை, சபா PGA பிரிவைச் சார்ந்த போலீஸ் துறையினர், அம்மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மேற்கொண்ட Op Taring Alpha 3 எனும் சிறப்பு நடவடிக்கையில் 635,000 ரிங்கிட் மதிப்பிலான மின்சிகரெட், வேப் சாதனங்கள் மற்றும் e-liquid ஆகியவற்றை பறிமுதல் செய்து, 23 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனையில், மலேசிய சுகாதார அமைச்சு (KKM) மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளும் இணைந்துக் கொண்டனர்.

இந்த நடவடிக்கை Kota Kinabalu, Tawau, Sandakan, Lahad Datu, Beluran, Keningau மற்றும் Semporna ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது என்று சபா PGA-யின் தளபதி Senior Asisten Komisioner Nor Omar Sappi கூறியுள்ளார்.

சோதனையின் போது 9,000 மின்சிகரெட் சாதனங்கள், 3,000 வேப் சாதனங்கள் மற்றும் 1,915 e-liquid யூனிட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையில், சபாவில் கடத்தல் மற்றும் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளை ஒழிக்க போலீசார் தொடர்ந்து தீவிரமாகவும் உறுதியாகவும் செயல்படுவார்கள் என்றும், சட்டத்திற்கு முரணான மின்சிகரெட், வேப் மற்றும் e-liquid விற்பனை, விநியோகம் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்க வேண்டும் என்றும் Nor Omar கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!