Latest

சமூக வலைத்தளத்தில் பிரபலமான தைவான் பெண் ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார் விசாரணைக்கு உதவ பாடகர் நம்வீ கைது

கோலாலம்பூர், நவ 4 –

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கிவந்த தைவான் பெண் ஒருவர் கோலாலம்பூர் Jalan Conlay விலுள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அக்டோபர் மாதம் 22 ஆம்தேதி இறந்து கிடந்தார்.

அந்த சம்பவத்தின்போது பிரபல உள்நாட்டு ரேப் பாடகரான Wee Meng Chee எனப்படும் 42 வயதான Namewee அந்த ஹோட்டல் அறையில் இருந்துள்ளார். போதைப் பொருள் வைத்திருந்தது மற்றும் அதனை பயன்படுத்தியது தொடர்பில் Namewee யை போலீசார் கைது செய்தனர்.

அந்த பெண்ணின் மரணத்தை கொலை என வகைப்படுத்தப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் ( Fadil Marsus ) தெரிவித்தார்.

இதற்கு முன் அந்த பெண் இறந்ததை திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டது. தற்போது அந்த பெண்ணின் மரணம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதால் விசாரணைக்கு உதவும் பொருட்டு Namewee விரைவில் தடுத்து வைக்கப்படலாம் என இன்று போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் அக்டோபர் 20 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வாயிலாக நாட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!