
சிரம்பான், நவம்பர் 7 – சிரம்பான், அம்பாங்கனிலுள்ள ஒரு தனியார் கிளினிக்கிற்கு, நேற்று காலை அழைக்கப்படாத நோயாளியாக உடும்பு ஒன்று வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த உடும்பு திறந்து வைத்திருந்த கதவின் வழி கிளினிக் வளாகத்திற்குள் நுழைந்து ஊழியர்களையும் மருத்துவரையும் பயத்தில் உறைய வைத்த காணொளி, தற்போது டிக்டோக்கில் வைரலாகி வருகிறது.
மனிதர்களைத் தவிர வேறு நோயாளிகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற தலைப்புடன் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளி, சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தினாலும், சிலர் கதவை மூடி வைப்பது எவ்வளவு அவசியம் என்பதையும் இதன் மூலம் நினைவூட்டி கருத்துப் பதிவிட்டிருக்கின்றனர்.