
உலு லங்காட், நவம்பர்-6 – சிலாங்கூர், உலு லங்காட்டில் போதைப் பித்தர்களின் கூடாரமாகி விளங்கி வரும் ஒரு சீன சுடுகாட்டுக்கு, அஜீத் படப் பாடலை நினைவுப்படுத்தும் ‘ஆலுமா டோலுமா’ (Aloma Dolma) code word எனப்படும் குறியீட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.
தேசியப் போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK அங்கு மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் அது தெரிய வந்தது.
என்றாலும் எதற்காக ‘ஆலுமா டோலுமா’ என்ற சொல் குறியீட்டுச் சொல்லாக தேர்ந்தெடுக்கப்பட்டது என தெரியவில்லை.
அச்சோதனையில் மொத்தமாக 43 போதைப் பித்தர்கள் கைதாகினர்.
சுடுகாட்டுக்குள் நுழையும் பாதையில் சந்தேகத்திற்குரிய நடமாட்டங்களைக் கண்காணித்து, போதைப் பித்தர்களுக்குத் தகவல் கொடுத்து வந்த ஆடவரும் கைதானார்.
ஷாபு வகை போதைப்பொருளை வாங்குவதற்கு மாதா மாதம் 500 ரிங்கிட் வரையில் அந்நபர் செலவிடுவதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
பொது மக்களின் நடமாட்டம் இல்லாததும், அமைதியானச் சூழல் நிழவுவதுமே, சிலாங்கூர் சுற்று வட்டார போதைப் பித்தர்களின் தேர்வாக அந்த சீன சுடுகாடு விளங்கி வருவதற்கு காரணமாகும்.