Latestமலேசியா

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு இஸ்தானா நெகாராவில் அரசாங்க வரவேற்பு நல்கப்பட்டது

கோலாலம்பூர், ஏப் 16 – மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Ibrahim அழைப்பின் பேரில் மலேசியாவுக்கான மூன்று நாள் வருகையை நேற்று தொடங்கிய சீன அதிபர் Xi Jinping கிற்கு இன்று இஸ்தானா நெகாராவில் அரசாங்க வரவேற்பு நல்கப்பட்டது. இன்று காலை மணி 10.30 அளவில் Xi Jinping கை Sultan Ibrahim வரவேற்றார்.

சீன அதிபருடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா, இரண்டு துணைப்பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, டத்தோஸ்ரீ படில்லா யூசோப் மற்றும் அமைச்சரவை உறுப்பினர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இஸ்தானா நெகாரா அணிவகுப்பு மைதானத்தில் வரவேற்பு விழா இரு நாடுகளின் தேசிய கீதங்களின் நிகழ்ச்சியுடன் தொடங்கியதோடு , அதைத் தொடர்ந்து அரச பீரங்கி படைப்பிரிவின் 41வது பேட்டரியிலிருந்து 21- வேட்டுச் சத்தம் முழங்கப்பட்டது.

அதன்பிறகு இஸ்தானா நெகாராவில் சீன அதிபரை வரவேற்கும் வகையில் தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத் துறையால் Xi Jinping வரவேற்கப்பட்டதோடு பேரரசர் பின்னர் சீன அதிபர் மற்றும் அவரது பேராளர் குழுவை சந்தித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!