
சீனா, ஆகஸ்ட் 9 – மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அதனைக் குறைத்து நல்ல தூக்கத்திற்காக குழந்தைகள் பயன்படுத்தும் ‘பூத்திங்கை’ (pacifiers) உபயோகிக்கும் ஒரு புதிய போக்கு உருவாகி வருவது பெரும் வேடிக்கையாய் உள்ளது.அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனா, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இச்செயல் பெருமளவு அதிகரித்து வருகின்றது.
சிலர், இது பதட்டத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது எனவும், சிலர் ADHD அறிகுறிகளை சமாளிக்க பயனுள்ளதாக இருக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர்.
கூடுதலாக, இந்த ‘பூத்திங்கை’ பயன்படுத்தி ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டதாக அறியப்படுகின்றது.
இந்நிலையில், மருத்துவர்கள் pacifiers ஐ நீண்ட நேரம் பயன்படுத்துவதால் தாடை விறைப்பு, பற்களின் இடம் மாறுதல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அபாயமும் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.