Latestமலேசியா

சுத்தமில்லை; தும்பாட்டில் 5 உணவகங்களை 14 நாட்களுக்கு மூட உத்தரவு

தும்பாட், பிப் 28 – நிர்ணயிக்கப்பட்ட சுகாதாரத் தரக் கட்டுப்பாட்டைப் பூர்த்திச் செய்யாததால், கிளந்தான், தும்பாட்டில் 5 உணவகங்கள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.

1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் அவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, மாநில சுகாதார இயக்குநர் டத்தோ Dr சை’னி ஹுசின் (Datuk Dr Zaini Hussin ) தெரிவித்தார்.

கிளந்தான் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவும் கிளந்தான் மாநில சுகாதாரத் துறையும் இணைந்து தும்பாட் மாவட்டத்தில் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மொத்தம் 61 உணவு வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அவற்றில் சுத்தமில்லாத அந்த 5 உணவகங்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக டத்தோ சை’னி சொன்னார்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான தாய்லாந்து எல்லைக்குச் செல்லும் பிரதான சாலை, மற்றும் தும்பாட்டைச் சுற்றியுள்ள உணவு வளாகங்களுக்கு அச்சோதனை நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!