
சுபாங் ஜெயா, மார்ச்-1 – சிலாங்கூர், சுபாங் ஜெயா SS16 அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து, ஜப்பானிய மாது விழுந்து மரணமடைந்தார்.
50 வயது அம்மாது நேற்று காலை கீழ்தளத்தில் குப்புற விழுந்துகிடந்ததாக, சுபாங் ஜெயா போலீஸ் தலைவர Wan Azlan Wan Mamat கூறினார்.
இல்லத்தரசியான அப்பெண் 14 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லையென்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திடீர் மரணமாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
என்றாலும் மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய சவப்பரிசோதனை மேற்கொள்ளப்படுமென Wan Azlan சொன்னார்.