கோலாலம்பூர், நவ 25 – விளம்பர பலகைகளில் இரு மொழி தொடர்பான விதிமுறை குறித்து சுற்றுலா ,கலை மற்றும் பண்பாடு அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் ( Tiong King sing ) எழுப்பிய விவகாரத்தை பெரிக்காத்தான் நேசனல் மஸ்ஜித் தானா நாடாளுமன்ற உறுப்பினர் குறைகூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தினால் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே நேற்று கடுமையான விவாதமும் நடைபெற்றது. விளம்பர பலகைக்கான விதிமுறைகள் குறித்து தியோங் வெளியிட்ட அறிக்கை குறித்து தாம் அதிர்ச்சி அடைந்ததாக மாஸ் எரிமியாத்தி ( Mas Ermieyati ) கூறினார்.
தேசிய மொழியைப் பயன்படுத்தும் விளம்பர பலகைகளைக் காண்பிப்பதன் மூலம் இந்த நாட்டில் உள்ள வர்த்தகர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதை உறுதி செய்யும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் நடவடிக்கைகள் சுற்றுலாப் பயணிகளின் மலேசியாவுக்கு வருகை செல்வதற்கான முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் , நமது நாட்டின் போட்டித்தன்மையைத் தடுக்கும் என்றும் அமைச்சர் கூறியது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக Mas Ermieyati தெரிவித்தார்.
அமைச்சரின் அந்த அறிக்கை உண்மையற்றதாக இருப்பதோடு இது குறித்து வெட்கப்படுவதாகவும் நமது நாட்டின் கலாச்சாரத்தை சுற்றுலா ,கலை, கலாச்சர அமைச்சர் பாதுகாக்க வேண்டியவராக இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் சமயம், இனம் மற்றும் அரச அமைப்பு குறித்து விவகாரங்களை சுற்றுலா அமைச்சர் எழுப்புகிறார் என்றும் Mas Ermieyati குற்றஞ்சாட்டினார்.