
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24,
மலேசிய சைவ சமயப் பேரவை ஏற்பாட்டில் ஏழாம் உலக சைவ சமய மாநாடு வரும் செப்டம்பர் 6,7-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
ஷா ஆலாம், Pusat Dagangan Latania மையத்தின் Tulip Banquet Hall மண்டத்தில் இரு நாள் விழாவாக இது நடைபெறும்.
‘உலக அமைதிக்குச் சைவ மெய்யியலின் கொடை’ என்ற கரும்பொருளில் நடைபெறும் மாநாட்டின் நோக்கம் குறித்து, சைவக் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் வணக்கம் மலேசியாவிடம் விவரித்தார்.
சைவ மெய்யியல் என்பது குறிப்பிட்ட ஒரு மனிதக் குழு, குறிப்பிட்ட ஓர் இனம், மதத்திற்கு உரியதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், சைவ சமயப் பேரவை, சைவத் திருக்கோயில் கலைக் கல்வி அறவாரியம் வாயிலாக ஒரு சிவன் கோயிலையும், ஒரு பெரிய சைவ சமயக் கல்லூரியை அமைக்கும் முயற்சி குறித்தும் அவர் விவரித்தார்.
இதனிடையே, அருளாளர் அருளுரை, திருமுறை பண்ணிசை, சமய நூல்கள் வெளியீடு என, அர்த்தமுள்ள அங்கங்கள் இம்மாநாட்டில் இடம் பெறும் என, மலேசிய சேவை சங்க பேரவையின் செயலாளர் செல்வகுமார் நடராசன் தெரிவித்தார்
தமிழ்ப் படிக்கத் தெரியாதவர்களின் வசதிக்காக இம்முறை மாநாட்டில் ஒரு புது முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
பல்வேறு தலைப்புகளில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளும் படைக்கப்படவுள்ளன.
2-நாள் மாநாட்டுக்கான கட்டணம் RM130 ஆகும்; ஆர்வமுள்ளோர் முன்கூட்டியே பதிந்துகொள்ளவும் செல்வகுமார் ஊக்குவித்தார்.
இவ்வேளையில், சைவ சமயக் கல்லூரி மற்றும் சிவன் கோயில் கட்டுமானத்துக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நல்லுள்ளங்கள், திரையில் காணும் வங்கிக் கணக்குகள் வாயிலாக அவ்வாறு செய்யலாம்.
Public Bank
Yayasan Falsafah Dan Institusi Saiva
A/C 3208616019
மாநாடு குறித்த மேல் தகவல்களுக்கு 016-251 2718 செல்வகுமரன்