
கோலாலம்பூர், மார்ச் 4 – பிப்ரவரி 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான சேவை வரி கட்டண உயர்வை கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஒத்திவைத்துள்ளது.
அடுத்த அறிவிப்புவரை கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கிவரும் சேவைகள் மற்றும் வசதிக்கான கட்டண விகிதம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சேவைக்கான கட்டண விகிதம் உட்பட எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் கோலாலம்பூர் மாநகர் மக்களின் நலன்கள் எப்போதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்த எந்தவொரு புதிய விவரங்களும் அவ்வப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மாநகர் மக்களின் சுபிட்சத்திற்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு உறுதியளிப்பதோடு அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் எப்போதும் மதிப்பதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.