
கோலாலம்பூர், அக்டோபர்-22 – தலைநகர், ச்சௌ கிட், லோரோங் ஹாஜி தாயிப்பில் உள்ள பிரபல GM பிளாசா பேரங்காடியில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட வெடிப்பில் மூன்று ஆடவர்கள் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளாகினர்.
மெர்ஸ் 999 அவசர அழைப்புச் சேவைக்கு தகவல் கிடைத்து, தித்திவங்சா தீயணைப்பு மீட்புத் துறையைச் சேர்ந்த எழுவர் சம்பவ இடம் விரைந்தனர்.
அப்போது, ஏழாவது மாடியிலிருந்த கடையில் ஏற்பட்ட வெடிப்பால், அதன் சிலிங் கூரைகள் இடிந்து விழுந்திருந்தன.
குளிர்சாதனப்பெட்டியில் எரிவாயு நிரப்பும் பணியின் போது அவ்வெடிப்பு எற்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
எனினும் வெடிப்பினால் தீ எதுவும் பரவவில்லை.
காயமடைந்த மூவரும் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.