Latestமலேசியா

ஜனவரி 31 வரை தீபகற்ப மலேசியாவைக் கொளுத்தப் போகும் வெயில்

கோலாலம்பூர், ஜனவரி-25 – தீபகற்ப மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக வட மாநிலங்களில், கொளுத்தும் வெயிலும் வறண்ட வானிலையும் ஜனவரி 31 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு வானிலை மாதிரி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த நீடித்த வெப்ப நிலையை, மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MetMalaysia கணித்துள்ளது.

அதே காலக் கட்டத்தில், சபா, லாபுவான் மற்றும் சரவாக்கில் ஜனவரி 29 முதல் 31 வரை காற்று குவியல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், இது இடி மின்னலுடன் கூடிய நீண்டகால கனமழையை உருவாக்கக்கூடும் என்றும் MetMalaysia கூறியது.

இந்நிலையில், வானிலை மாற்றங்களைப் பற்றி துல்லியமான மற்றும் அண்மையத் தகவல்களைப் பெற, பொது மக்கள் MetMalaysia சமூக வலைத்தளங்கள், அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள், myCuaca கைப்பேசி செயலி ஆகியவற்றை கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!