
குவா மூசாங், செப் 17 – Jalan Gua Musang – Lojing 78 ஆவது கிலோமீட்டரில் சாலை உள்வாங்கியதால் இன்று முதல் அனைத்து போக்குவரத்திற்கும் அந்த சாலை மூடப்பட்டது.
அடுத்த அறிவிப்புவரை அந்த சாலை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சாலை பயனர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுவதோடு எப்போதும் கவனமாக இருப்பதோடு , தங்கள் பயணங்களை திட்டமிடவும் வலியுறுத்தப்படுகின்றனர்.
குவா மூசாங்கிலிருந்து பஹாங்கிற்கு Sungai Koyan, வழியாக Ringlet, Tapah மற்றும் பேராவின் Ipoh வழியாக , சாலை பயனர்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்தலாம். செப்டம்பர் 12 ஆம் தேதி ஏற்பட்ட நிலம் உள்வாங்கிய சம்பவம் இதுவாகும்.
இதனால் குவா முசாங்கிலிருந்து Tanah Tinggi Lojing வரையிலான வரையிலான பாதை ஒரு தடமாக மூடப்பட்டது.
சம்பந்தப்பட்ட இடத்தில் முதல் முறையாக நிலம் மூழ்கிய சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி கண்டறியப்பட்டது.
இதனால் அந்த சாலை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி, முதல் முறையாக நிலம் உள்வாங்கிய இடத்திலிருந்து ஐந்து மீட்டர் தொலைவில் அதே இடத்தில் ஒன்பது மீட்டர் ஆழம் கொண்ட இரண்டாவது முறையாக நிலம் உள்வாங்கியது.
கூடுதலாக, மார்ச் 15 ஆம் தேதி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக, அதே இடத்தில் மற்றொரு மூழ்கும் குழி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.