Latestமலேசியா

ஜோகூரில் காதலனின் மர்ம உறுப்பை துண்டித்த பெண் கைது

ஜோகூர் பாரு, அக் 9 – தன்னை காதலித்து வந்த வங்காளதேசத்து ஆடவர் வங்காளதேசத்திலுள்ள அவரது மனைவியுடன் இன்னமும் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால் ஆத்திரம் அடைந்த அப்பெண் காதலனின் மர்ம உறுப்பை கத்தியால் துண்டித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து 34 வயதுடைய வங்காளதேச பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தனக்கு அறிமுகமான 33 வயதுடைய வங்காளதேச ஆடவரின் மர்ம உறுப்பு மற்றும் அவரது இடது கையை அவரது காதலியினால் வெட்டப்பட்டதாக உள்நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் போலீசிற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து ஜோகூர்,GELANG PATAH KAMPUNG Lokan பகுதியில் போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் சிகிச்சைக்காக ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அக்டோபர் 8ஆம்தேதி தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணை ISKANDAR புத்ரி போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த போலீசார் கைது செய்தனர்.

அதோடு 29 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த பெண் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 326 ஆவது விதியின் கீழ் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதமும் விதிக்கப்படலாம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!