
மலாக்கா,செப்டம்பர்-4,- தேசிய தினத்தை முன்னிட்டு மலாக்கா டுரியான் துங்கால் காற்பந்து கிளப், MyRev எனப்படும் மலேசிய இளைஞர் புரட்சி இயக்கத்துடன் இணைந்து இரு Reserve ஆட்டக்காரர்கள் உட்பட அறுவர் கலந்துகொண்ட காற்பந்து போட்டியை அண்மையில் மிகவும் சிறப்பாக நடத்தியது.
10 குழுக்கள் கலந்துகொண்ட இப்போட்டியை மலாக்கா டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ Zahari Abd Khalil அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மேலும் டுரியான் துங்கால் காற்பந்து கிளப்பின் துணைத்தலைவர் P MANICKAVELU , கிளப்பின் பயிற்சியாளரும் மலாக்கா காற்பந்து சங்கத்தின் நுட்ப தலைவருமான Leong Hong Seng , டுரியான் துங்கால் காற்பந்து கிளப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
போட்டி ஏற்பாட்டுக் குழுவின் இயக்குநரும் தேசிய ம.இகாவின் புத்ரா விளையாட்டுப் பிரிவின் தலைவருமான விக்ரம் மாணிக்கவேலுவின் லட்சியத் திட்டமாக அமைந்த இப்போட்டி உள்ளூர் காற்பந்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.
ஆண்டுதோறும் தேசிய தின கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த காற்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்படும் என விக்ரம் மாணிக்கவேலு நம்பிக்கை தெரிவித்தார்.
இப்போட்டியில் மலாக்கா காற்பந்து சங்கத்தின் உதவித் தலைவரும், டுரியான் துங்கால் காற்பந்து கிளப்பின் ஏற்பாட்டு ஆதரவாளருமான டத்தோ Ravindran சிறப்பு வருகை புரிந்தார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தில் இப்போட்டியை ஏற்று நடத்திய டுரியான் துங்கால் காற்பந்து கிளப் வெற்றியாளராக வாகைசூடிய வேளையில் Huaren காற்பந்து கிளப் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
இப்போட்டியை மலாக்கா ம.இ.காவின் துணைத்தலைவைர் நடராஜா நிறைவு செய்து வைத்தார்.