Latestஉலகம்

டெல்லியிலிருந்து அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட ஆம்லட்டில் கரப்பான் பூச்சி

புது டெல்லி, செப்டம்பர் -29 – புது டெல்லியிலிருந்து அமெரிக்காவின் நியூ யோர்க் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக, பயணி ஒருவர் புகார் கூறியுள்ளார்.

செப்டம்பர் 17-ம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தால் தனது 2 வயது மகனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அப்பெண் X தளத்தில் தெரிவித்தார்.

முட்டை ஆம்லட்டை என் மகன் பாதிக்கும் மேல் சாப்பிட்டு விட்ட பிறகே அதில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டோம் என்றார் அவர்.

பயணிக்கு நேர்ந்த அசௌகரியத்துக்காக வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனம், உரிய விசாரணைகள் நடைபெறுவதாக உறுதியளித்தது.

இவ்வாண்டு தொடக்கத்தில் ஏர் இந்தியா விமானமொன்றில் பரிமாறப்பட்ட உணவில்  பிளேடு கத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!