
கோலாலம்பூர், டிச 4 – புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கிடையலான தேசிய நிலையிலான ஹாக்கி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் சிலாங்கூர் குழுவினர் வெற்றி பெற்றனர்.
இம்பாக் ஹாக்கி கழகத்தின் ஏற்பாட்டில் மலேசிய ஹாக்கி சம்மேளனமும் கியு நெட் நிறுவனமும் 4வது ஆண்டாக இப்போட்யை ஏற்பாடு செய்தன.
ஆண்கள் பிரிவில் ஏழு மாநிலங்களை பிரதிநிதித்து 13 அணிகளும் பெண்கள் பிரிவில் ஏழு குளுக்களும் இப்போட்டியில் கலந்துகொண்டன.
ஆண்கள் பிரிவில் சிலாங்கூர் குழுவினர் சாம்பியனாக வாகைசூடியதன் மூலம் 2,000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் சுழற்கிண்ணத்தை வென்றனர் .
இரண்டாவது இடத்தை நெகிரி செம்பிலான் குழுவும், மூன்றாவது இடத்தைப் பெற்ற ஜோகூர் குழுவும் வென்றன.
அதே சமயத்தில் பெண்கள் பிரிவில் சிலாங்கூர் குழுவினர் முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை ஜோகூர் குழுவினரும் மூன்றாம் இடத்தை கெடா குழுவினரும் வென்றன.
நிறைவு விழாவில் பேசிய Impact ஹாக்கி கழகத்தின் தலைவரும் இப்போட்டியின் ஏற்பாட்டுக்குழு தலைவருமான டோமினிக் சவரிமுத்து இப்போட்டி தொடர்ந்து நடைபெறவும் ஹாக்கி விளையாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை புரிய அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் உதவியும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நிறைவு விழாவில் மலேசிய ஹாக்கி சம்மேளன தலைவர் டத்தோ ஸ்ரீ சுபாஹான் கமால், கியு நெட் பிரதிநிதியாக குகன், கல்வி துணையமைச்சரின் சிறப்பு அதிகாரி இளங்கோ, மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் செயல்முறை அதிகாரி ஜெயன், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் தேசிய தலைவர் சு.பழனி, முன்னாள் தலைவர் எஸ்.எஸ் பாண்டின், சிலாங்கூர் மாநில தலைவர் தமிழரசு, கூட்டரசு பிரதேச தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



