
பத்து மலை, ஆகஸ்ட்-4 – SMC எனப்படும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் வருடாந்திர நிகழ்வான கல்வி யாத்திரை, 31-ஆவது ஆண்டாக நேற்று காலை பத்து மலையில் நடைபெற்றது.
SMC நிறுவனர் தான் ஸ்ரீ Dr தம்பிராஜா மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் கல்வி யாத்திரை இதுவாகும்.
நாடளாவிய நிலையில் சுமார் 5,000 மாணவர்களும் பெற்றோர்களும் இதில் கலந்துகொண்டனர்.
காலை 7 மணிக்கு பக்தி பாடல்கள், காயத்திரி மந்திரம், மகா வித்யா யாகம் என வழிபாடுகள் தொடர்ந்த நிலையில்,
பின்னர் மாணவர்கள், SMC-யின் சக்தி வேலைப் பின்தொடர்ந்து புனித நீரை ஏந்தி மலைக் கோயில் முருகனுக்கு நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
பின்னர் மாணவர்களுக்கு பத்து மலை பள்ளி மண்டபத்தில் கல்வி வழிகாட்டி கருத்தரங்கும் நடைபெற்றது.
இதனிடையே,
‘கல்வித் தந்தை’ Dr தம்பிராஜா நம்மை விட்டு மறைந்தாலும், அவரின் சீரிய முயற்சிகள் தொடரப்படுமென SMC இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.
கல்வி யாத்திரையில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலர் வணக்கம் மலேசியாவுடன் தங்கள் அனுபவத்தைப் பகிந்துகொண்டனர்.
எதிர்பார்த்ததை விட இவ்வாண்டு ஏராளமானோர் கல்வி யாத்திரையில் பங்கேற்றது, ஸ்ரீ முருகன் நிலையத்தின் 43-ஆண்டு கால கல்விப் பணிக்கு மக்களிடம் இருக்கும் வலுவான ஆதரவைக் காட்டுவதாக ஶ்ரீ முருகன் கல்வி நிறுவனத்தினர் நம்புகின்றனர்.