Latestமலேசியா

தாப்பா அருகே PLUS நெடுஞ்சாலையில் விபத்து; 3 முதியவர்கள் பலி

தாப்பா, ஜூலை-23- தாப்பா – பீடோர் அருகே PLUS நெடுஞ்சாலையில் 2 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 முதியவர்கள் பலியாயினர். மேலும் மூவர் அதில் காயமடைந்தனர்.

நேற்று காலை 11 மணியளவில் Toyota Vios, Proton X50 காரை பின்னால் மோதியதில், Toyota காரிலிருந்த ஒருவர் காயமுற்றார்.

Proton X50-யில் இருந்த 5 ஆடவர்களில் இருவர் காயமடைந்த வேளை, மூவர் மரணமடைந்தனர்.

அவர்கள் முறையே 77 வயது Chong Ong, 76 வயது Teh Kim Kai, 70 வயது Tan Ah Tak என அடையாளம் கூறப்பட்டது.

காயமடைந்த மூவர் சிகிச்சைக்காக தாப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Toyota Vios காரோட்டியை விசாரணைக்காகத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!