மலாக்கா, செப்டம்பர்-11, மலாக்கா, Syed Abdul Aziz மேம்பாலத்தில் பெரோடுவா மைவி கார் தடம் புரண்டு, 30 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்ததில், அதன் ஓட்டுநர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
இன்று காலை 5.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, தனியாக காரோட்டிச் சென்றவர் தூக்கக் கலக்கத்திலிருந்தார்.
திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடம் புரண்டு, சாலைத் தடுப்பில் மோதி பாலத்திற்கடியில் விழுந்தது.
எனினும், முதுகிலும் வலது காலிலும் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.
மேல் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்களையும் போலீஸ் அடையாளம் கண்டு வருகிறது.