பூசான், செப்டம்பர் -22, தென் கொரியா பூசானில் (Busan) கனமழையின் போது சாலை உள்வாங்கியதில், 2 டிரக் லாரிகள் 8 மீட்டர் ஆழ குழிக்குள் விழுந்தன.
பூசான் நகரில் வெள்ளிக்கிழமையன்று 200 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழைக் கொட்டித் தீர்த்த போது, 10 மீட்டர் அகலம், 5 மீட்டர் நீளத்திற்கு அப்பெரியக் குழி உருவாகியது.
குழிக்குள் விழுந்த வாகனங்களில் ஒன்று பூசான் தீயணைப்புப் படையின் வடிகால் டிரக் ஆகும்; மற்றொன்று அவ்வழியே வந்த டரக் லாரியாகும்.
நல்லவேளையாக அதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நில அமிழ்வுக்கான உண்மைக் காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தென் கொரியத் தலைநகர் சியோலில் செப்டம்பர் 1-ம் தேதி இதே போல் சாலையின் நடுவே திடீர் பள்ளமேற்பட்டு வயதான தம்பதி காரோடு விழுந்து காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.