Latestஇந்தியாசினிமா

நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல் நலக்குறைவால் 71 வயதில் மறைவு

சென்னை, ஆகஸ்ட்-3,

நகைச்சுவை நடிகர் – நிகழ்ச்சித் தொகுப்பாளர் – இசையமைப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட மதன் பாப் என்ற மதன் பாபு, உடல் நலக்குறைவால் 71 வயதில் சென்னையில் காலமானார்.

இசையமைப்பாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் நடிகராக பிரபலமானவர் இவர்.

வித்தியாசமான சிரிப்பிலையே மதன் பாபுவின் பெரிய அடையாளமாகும்.

1984-ஆம் ஆண்டு வெளியான ‘நீங்கள் கேட்டவை’ படத்தில் நடிகராக அறிமுகமானவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பூவே உனக்காக, ஃபிரண்ட்ஸ், வில்லன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் போன்றவை இவர் நடிப்பில் வெளியான பிரபல படங்களாகும்.

அதே சமயம், ‘அசத்த போவது யாரு’ என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி பெரும் புகழடைந்தார்.

கிட்டார் கலைஞருமான மதன் பாபு, ஆர்க்கெஸ்ட்ரா (Orchestra) இசைக் குழுவைத் தொடங்கி அதனை நடத்தி வந்தார்.

அதில், அப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கீபோர்ட் (keyboard) வாசித்துள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.

மதன் பாபுவின் மறைவுக்கு திரையுலகத்தினரும் இரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!