Latestமலேசியா

நிலைத்தன்மைமிக்க நகரங்கள் மற்றும் சமூகத்துக்காக, மக்கள்-அரசாங்கம்-தனியார் பங்காளித்துவத்தை ஊக்குவிக்க மலேசியா அறைகூவல் – ஙா கோர் மிங்

கெய்ரோ (எகிப்து), நவம்பர்-5 – நிலைத்தன்மைமிக்க நகரங்கள் மற்றும் சமூகத்துக்காக, மக்கள்-அரசாங்கம்-தனியார் ஆகிய முத்தரப்புகளின் பங்காளித்துவத்தை ஊக்குவிக்குமாறு, அனைத்துலச் சமூகத்தை மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக தனியார் துறையின் முழு பங்கேற்பின்றி நம் மக்களுக்கு தரமான வாழ்க்கையை நம்மால் தர முடியாதென, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

உலகளாவிய செல்வத்தில் 70 விழுக்காடு தனியார் கைகளில் இருக்கிறது; அவர்களின் உதவியில்லாமல் நகரமயமாக்கல் நிலையானதாக இருக்காது என்றார் அவர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் 12-வது உலக நகர்ப்புற ஆய்வரங்கு வணிக மாநாட்டில் முக்கிய உரையாற்றிய போது அமைச்சர் அவ்வாறு சொன்னார்.

நகரங்களில் நிதியளிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் சுற்றுச் சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் எனப்படும் ESG அம்சத்தை அனைத்துலகச் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மலேசியா மடானியின் கொள்கைகளுக்கு ஏற்ப நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நிலையான வளர்ச்சியின் முக்கிய மதிப்பாக மனிதநேயம் இருக்க வேண்டுமென கோர் மிங் கேட்டுக் கொண்டார்.

84 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள், மாநகர மேயர்கள், அவர்களின் பிரதிநிதிகள் என 28,000 பேர் அம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

UN-Habitat அமைப்பால் 2001-ல் நிறுவப்பட்ட இம்மன்றமானது, நகரமயமாக்கல் சவால்களை எதிர்கொள்வதற்கான யுக்திகளை நாடுகளிடையே பகிர்ந்துகொள்வது மற்றும் நிலையான வளர்ச்சித் தீர்வுகளை இணைந்து உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!