
கோலாலம்பூர், ஏப் 22 – கோலாலம்பூரையும் -சிலாங்கூரையும் பிரிக்கும் கூட்டரசு நெடுஞ்சாலையில் உள்ள அலங்கார வளைவுக்கு அருகே நேற்றிரவு ஒரு புரோட்டான் பிரிவே கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இரவு மணி 10.17 க்கு அவசர அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.
பந்தாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஏழு பணியாளர்கள் மற்றும் ஒரு மீட்பு வாகனம் அடங்கிய மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
அங்கு சென்றடைந்ததும், புரோட்டான் பிரிவே முழுமையாக தீப்பிடித்து எரிந்ததை கண்டு தீயை அணைக்கும் நடவடிக்கையில் முழுமூச்சுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் எவரும் காயம் அல்லது உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இத்தீவிபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறையின் தடயவியல் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்