
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-1- உள்ளூரின் மூத்த நகைச்சுவை நடிகர் சத்தியா உடல் நலக் குறைவால் அம்பாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இடது கால் விரல்களில் ஏற்பட்ட நோய் தொற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
கட்டை விரலில் ஏற்பட்ட தொற்று உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி மோசமாவதைத் தடுக்க, அவரின் இடது கால் விரல்களில் மூன்றினை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
பினாங்கு, புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷிட், மருத்துவமனையில் சத்தியாவை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
வைரலான அந்த வீடியோவில் தங்களின் அபிமான கலைஞரின் தற்போதைய நிலை கண்டு வலைத்தளவாசிகள் சோகமும் வருத்தமும் தெரிவித்தனர்.
தொலைக்காட்சிகளில் தோன்றி ஒட்டுமொத்த மலேசியர்களையும் சிரிக்க வைக்க கலைஞர் சத்தியா சீக்கிரமே உடல் நலம் பெற்று திரும்ப வேண்டுமென இரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.