
சபா, ஜூலை 21 – பகாங் மாநில விருதை வாங்கி தருவதாக கூறி, சுமார் 6,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தை ஒருவரிடம் பெற்று, பின்பு அந்நபரை ஏமாற்றிய டத்தோ பட்டம் கொண்ட தொழிலதிபரை சபா ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.
40 வயதான அவ்வாடவர், இன்று மதியம் 12 மணியளவில் சபா MACC அலுவலகத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கௌரவ பட்டத்தைப் பெறுவதற்காக பாதிக்கப்பட்டவருக்கு நேர்மையற்ற வழிமுறைகளையும் அவர் ஆலோசனையாக வழங்கியிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நபருக்கு 10,000 ரிங்கிட் ஜாமீன் விதிக்கப்பட்ட நிலையில், அந்நபர் 5,000 ரிங்கிட் ரொக்க வைப்புத் தொகையை செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று சபா MACC இயக்குனர் டத்தோ எஸ். கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் எதிர்வரும் வியாழனன்று கோத்தா கினாபாலு சிறப்பு ஊழல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளார்.