
பத்து மலை, பிப்ரவரி-13 – பத்து மலை தைப்பூசம் பக்தி மணம் கமழ வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
விழா ஏற்பாட்டுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பங்கேற்று சிறப்பித்த பக்த பெருமக்களுக்கும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில் அதன் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா நன்றித் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், பத்து மலை தைப்பூச விழாவின் போது பெறப்பட்ட உண்டியல் காணிக்கை, வரும் சனிக்கிழமை பிப்ரவரி 15-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
முதன் முறையாக இவ்வாண்டு பத்து மலை திருத்தலத்தின் ஸ்ரீ மகா துர்கை அம்மன் கோவிலில் உண்டியல்கள் எண்ணப்படுகின்றன.
சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கும் உண்டியல் எண்ணுதலில், கடந்த காலங்களில் சேவை செய்தது போன்று இவ்வாண்டும் சேவை செய்ய தன்னார்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.
தன்னார்வலர்களுக்கு, காலை சிற்றுண்டி, மதிய உதவு, மாலை தேநீர் ஆகியவை வழங்கப்படும்.
எனவே, இதையே அழைப்பாக ஏற்று, உண்டியல் காணிக்கை எண்ணுதலை சிறப்பாக நடத்திக் கொடுக்குமாறு தான் ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.