Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

பயனர்கள் மீது குறி வைப்பு; இஸ்ரேலிய உளவுமென்பொருள் நிறுவனம் மீது WhatsApp குற்றச்சாட்டு

வாஷிங்டன், பிப்ரவரி-1 – இஸ்ரேலிய உளவுமென்பொருள் நிறுவனமான Paragon Solutions, பத்திரிகையாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட தனது பயனர்களைக் குறி வைத்திருப்பதை, WhatsApp செயலி அம்பலப்படுத்தியுள்ளது.

குறைந்தது 90 பயனர்களின் WhatsApp கணக்கையாவது ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

Hack செய்ய குறி வைக்கப்பட்டவர்கள் யாரென்று WhatsApp அதிகாரி குறிப்பிட்டுச் சொல்லவில்லை; ஆனால் அவர்கள் சில ஐரோப்பிய நாடுகள் உட்பட 24 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.

அவ்வாறு குறி வைக்கப்பட்ட WhatsApp பயனர்களுக்கு, எந்த பயனர் தொடர்பும் தேவையில்லாத தீங்கிழைக்கும் மின்னணு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன; இது zero-click hack என்று அழைக்கப்படும் திருட்டுத்தனமாகும்.

இது குறித்து Paragon-னுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள WhatsApp, பயனர்களின் தனிப்பட்ட சுதந்திரம் தொடர்ந்து பாதுகாக்கப்படுமென உத்தரவாதமளித்தது.

எனினும், WhatsApp-பின் அக்குற்றச்சாட்டு குறித்து Paragon கருத்துரைக்க மறுத்து விட்டது.

Paragon போன்ற உளவுமென்பொருள் நிறுவனங்கள், அரசாங்க வாடிக்கையாளர்களுக்கு உயர்நிலை கண்காணிப்பு மென்பொருளை விற்று வருகின்றன; குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் தேசிய பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் தங்களது சேவைகள் முக்கியமானவை என பறைசாற்றியும் கொள்கின்றன.

ஆனால் இதுபோன்ற உளவுக் கருவிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் குறைந்தது 50 அமெரிக்க அதிகாரிகளின் தொலைபேசிகளில் மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதானது, தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி குறித்த கவலைகளை எழுப்புகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!