
குவந்தான், ஜன 27 – பஹாங் குடிநுழைவுத்துறை நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இந்தோனேசியா, வங்காளதேசம், மியன்மார், பாகிஸ்தான் மற்றும் இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 179 பேர் கைது செயப்பட்டனர்.
அதிகாலை 1 மணிக்கு தொடங்கி 12 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையில் குடிநுழைவுத்துறையின் 41 அதிகாரிகள் குவந்தான், ஜெரண்டுட் (Jerantut) உட்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் இறங்கினர்.
பெர்மிட் இல்லாத வெளிநாட்டினர் வேலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத்துறை முகநூலில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது.
நண்பகல் ஒரு மணிவரை நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது குடிநுழைவுத்துறையின் விதிகளை மீறியது தொடர்பில் 225 தனிப்பட்ட நபர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்ப்டட அனைவரும் விசாரணைக்காக கெமயான் (Kemayan) குடிநுழைவு தடுப்பு முகாமில் குடிநுழைவு சட்டத்தின் 51 (5) (b) விதியின் யின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். வெளிநாட்டினர் தங்கியிருந்த இடங்களின் உரிமையாளர்களும் விசாரணைக்கு உதவும்படி அழைக்கப்பட்டனர்.