
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-8 – பினாங்கு, பாயா தெருபோங்கில் குப்பைத் தொட்டியில் பூனைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில், போலீஸுக்குப் புகார் கிடைத்துள்ளது.
வைரலாகியுள்ள அச்சம்பவம் குறித்து 49 வயது உள்ளூர் ஆடவர் வியாழக்கிழமை புகார் செய்ததாக, தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
அப்புகார் கால்நடை சேவைத் துறையான DVS-சின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்படுமென்றார் அவர்.
முன்னதாக வைரலான 30 நிமிட வீடியோவில், அதனைப் பதிவுச் செய்தவர் ஒரு ஆரஞ்சு நிற குப்பைத் தொட்டியருகே செல்கிறார்.
குப்பைத் தொட்டியினுள், கருப்பு பிளாஸ்டிக் பைகளில் சில பூனைகள் இறந்து கிடப்பது அதில் தெரிந்தது.
இதையடுத்து அப்பூனைகளைக் கொன்று அங்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலைத்தளங்களிலும் கோரிக்கை எழுந்துள்ளது